Our Feeds


Wednesday, October 2, 2024

Sri Lanka

ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கான புதிய தொழில்நுட்ப பீடம் திறந்து வைப்பு!


ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கான புதிய தொழில்நுட்ப பீடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தகஃபுமி கடோனோ (Takafumi Kadono) ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பீடத்தில் 800 இருக்கைகள் கொண்ட கேட்போர் கூடம், மூன்று மாடிகள் கொண்ட நூலகம், விரிவுரை அரங்குகள் அமைந்துள்ளன.

2021 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதற்காக 33 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »