பாராளுமன்ற பொதுத் தேர்தல் பிரச்சார பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கண்டி மாவட்டத்தில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் மற்றும் அக்குரனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் ஆகியோர் இணைந்து போட்டியிடுகின்றனர்.
குறித்த இருவரும் சுயேற்ச்சை குழு 11 இல் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹலீம் ஆகியோருக்கு மாற்றாக கண்டி மாவட்டத்தில் வேறு இருவரை களமிறக்குமாறு சஜித் பிரேமதாச தரப்புக்கு பொதுமக்கள், பள்ளிவாயல் சம்மேளனங்கள், மற்றும் சமூக ஆர்வளர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையில் பொதுமக்களின் விருப்புக்கு மாறாக மீண்டும் அதே இருவரையே கண்டி மாவட்ட வேட்பாளர்களாக SJB நிறுத்தியுள்ளது.
அதே போல் முஸ்லிம் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள NPP வேட்பாளர்களில் பலர் சமூகம் சார்ந்த விவகாரத்தில் இதற்கு முன் எந்தவிதமான அனுபவங்களும் கொண்டவர்கள் இல்லையென்பதும் பல பகுதிகளில் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு விரக்தி நிலையை உண்டாக்கியுள்ளது.
எனவேதான் மாற்றுத் தெரிவுகளின் பக்கம் மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கண்டி மாவட்டத்தில் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கவும், நாட்டு நலனை முன்னிறுத்தி பயனிக்கவும் மேற்கண்ட இருவரும் சுயேற்சையாக களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.