திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளோடு சேர்ந்து தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன் தெரிவித்தார்.
வேட்பு மனு நியமனக் குழுவின் இன்றைய வவுனியா கூட்டம் தொடர்பாக கிளிநொச்சியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஏற்கனவே யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் நியமனங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இன்று வன்னி மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களுக்கான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான நியமனப்பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளோடு சேர்ந்து தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனு நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
Wednesday, October 9, 2024
தமிழரசுக்கட்சி திருகோணமலையில் வீட்டுச்சின்னத்திலேயே போட்டி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »