ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கொழும்பு மாவட்ட வேட்பாளர்
ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது சொந்த முகாமில் உள்ள சில உறுப்பினர்கள் தமக்கு பிரச்சினைகளை உருவாக்குகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.அண்மையில் எமது கட்சியில் இணைந்த எனது சொந்த அரசியல் முகாமைச் சேர்ந்த சிலர் எனக்கு பிரச்சினைகளை உருவாக்கி என் மீது சேற்றை வாரி வீசுகின்றனர் என திருமதி பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த நபர்களைப் பற்றி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிந்திருப்பதாகவும், விரைவில் கட்சியை சரியான பாதையில் கொண்டு செல்வார் என்றும் நான் நம்புகிறேன் என்றார்.
எதிர்காலத்தில் SJB மறுசீரமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.