பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
புதிய ஜனாதிபதி தெரிவானதன் பின்னர், முதற் தடவையாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று பிற்பகல் கூடிய அரசியலமைப்பு சபையில்
இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு 14 நாட்களுக்கு மேல் கடமையாற்றுவாராயின் அதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.