Our Feeds


Wednesday, October 16, 2024

SHAHNI RAMEES

மூன்றாம் தவணை ஒத்திவைப்பு!


எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடையவிருந்த

2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதனால் மூன்றாம் தவணை மற்றும் 2024 கல்வியாண்டு 24.01.2025 அன்று முடிவடையும்.


இது தொடர்பில் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்து கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர விடுத்துள்ள கடிதத்தில், மூன்றாம் தவணைப் பரீட்சையை நடாத்தி மாணவர்களுக்கு முன்னேற்ற அறிக்கைகளை வழங்க போதிய அவகாசம் வழங்குமாறு அதிபர்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மூன்றாம் தவணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூன்றாம் தவணை முடிவடையும் 24 ஆம் திகதிக்குள் மூன்றாம் தவணைப் பரீட்சையை நடத்தி முன்னேற்ற அறிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »