புலனாய்வுப் பகுப்பாய்வு பிரிவின் புதிய பணிப்பாளராக ஓய்வுபெற்ற காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டமையானது பழைய அரசியல் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக மக்கள் போராட்டக் கூட்டணியின் வேட்பாளர் நுவன் போபகே தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார மேடைகளில் ஷானி அபேசேகர, அந்த கட்சிக்குச் சார்பாகப் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
தற்போது தங்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரியான அவருக்கு புதிய அரசாங்கத்தில் இவ்வாறான உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளை வழங்குவதனையே கடந்த அரசாங்கங்களும் செய்துவந்தன.
இதனை ஒழிக்க வேண்டும் என்றே தேசிய மக்கள் சக்தியும் பிரசாரம் செய்து வந்தது.
தற்போது, தங்களுக்கு ஆதரவு வழங்கிய ஓய்வு பெற்ற அதிகாரியான ஷானி அபேசேகரவுக்கு பதவியை வழங்கியதன் மூலம் தற்போதைய அரசாங்கமும் அதே பழைய கலாசாரத்தை பிரதிபலிக்கிறது.
அதேநேரம், 7 சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கமும் ஊழல்வாதிகளை கைதுசெய்வதாக கூறியதே தவிர அவ்வாறு எதனையும் செய்யவில்லை.
இவை தேர்தல் காலங்களில் கண்துடைப்புக்காக காட்டப்படும் நாடகங்கள் எனவும், தேர்தல் முடிந்தவுடன் இந்த விசாரணைகள் மீண்டும் கிடப்பில் போடப்படும் எனவும் மக்கள் போராட்ட கூட்டணியின் வேட்பாளர் நுவன் போபகே தெரிவித்துள்ளது.
Monday, October 14, 2024
புதிய அரசாங்கமும் பழைய அரசியல் கலாசாரத்தையே பின்பற்றுகின்றது!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »