Our Feeds


Sunday, October 20, 2024

Zameera

சியரா லியோன் ஜனாதிபதி இலங்கை வருகை


 மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் (Sierra Leone) ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் செல்லும் சியரா லியோன் ஜனாதிபதி, இன்று (20) பிற்பகல் நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வரும் அவர் நாளை சமோவா செல்லவுள்ளார்.

சியரா லியோன் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு நாளை (21) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »