எதிர்வரும் பொதுத் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்தியச் செயற் குழு என்பன கூடி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய சகல தரப்பினரும் கூட்டணியாக ஒன்றிணைந்து கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மாத்திரமே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் மாகாண சபைத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியாகப் புதிய சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு ஃப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதனையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்ரிய, கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது கேஸ் சிலிண்டருக்கு அனுமதி வழுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Saturday, October 5, 2024
கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் நிமல் தரப்பினர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »