மட்டக்களப்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்த ஜனநாயக
தேசிய முன்னணிக் கட்சி தேர்தல் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டது.
பொதுத் தேர்தலில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்து வேட்பு மனுத் தாக்கல் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஜனநாயக தேசிய முன்னணி கட்சி தேர்தல் ஆணைக்குழுவால் இன்று நிராகரிக்கப்பட்டது.
குறித்த கட்சி சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 8 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.