மாதுரு ஓயா தேசிய பூங்காவில் மயிலை வேட்டையாடி, அறுத்து உண்ணும் காணொளியை யூடியூப்பில் வெளியிட்ட வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு பழங்குடியின மக்கள் தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
‘கோ வித் அலி’ சேனலில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள், குழு மயிலை வேட்டையாடுவதையும், அதை விறகு தீயில் சமைப்பதையும், தேசிய பூங்காவிற்குள் சாப்பிடுவதையும் காட்டுகிறது.
தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு பழங்குடியினரை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து, தீ வைத்து, பாதுகாக்கப்பட்ட பறவையை வேட்டையாடி கொன்று, சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக இந்த குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேபோன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர் மற்றும் தமபான பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு சுதேசிகள் மயிலை அறுத்து சாப்பிட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.
இது தொடர்பான வழக்கு மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது