Our Feeds


Tuesday, October 15, 2024

SHAHNI RAMEES

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு – சாட்சிகளை மன்றில் முன்னிலையாக உத்தரவு!



முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா

கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 வழக்குகள் தொடர்பான சாட்சிகளை எதிர்வரும் 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தவறான தகவல்களைச் சமர்ப்பித்து இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றமை மற்றும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.


விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்மொழியப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


இதன்படி, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அல்லது அவரது பிரதிநிதி மற்றும் சம்பந்தப்பட்ட வழக்கில் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பல தரப்பினருக்கு இந்த அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »