இந்திய-இலங்கை கூட்டு திரைப்படத்தின்
படப்பிடிப்பின் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் எல்ல பிரதேசத்துக்கும் இடையில் ஏழு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதர புகையிரத சேவை இன்று (16) முதல் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் வழமை போன்று செயல்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி இன்று காலை முதல் பொடி மெனிகே, உடரட மெனிகே, இரவு அஞ்சல் ரயில், ஒ.டி.சி ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்குமென ரயில்வே திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.