மனித பாவனைக்கு தகுதியற்ற 3000 கிலோகிராம் எடை கொண்ட தேயிலையை சட்டவிரோதமாக லொறியில் ஏற்றிச் சென்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 36 வயதுடைய பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.