காட்டு யானைகள் ரயில்களில் மோதப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காகத் ரயில்வே திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது.
அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், ரயில் விபத்துகளால் யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்காக நீண்ட கால வேலைத் திட்டமொன்றைச் செயல்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்காலிக தீர்வின் அடிப்படையில் மட்டக்களப்பு மார்க்கத்தில் மதிய நேரத்தில் மட்டும் சரக்கு ரயில்களை இயக்குவதற்கு முன்னதாக ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
கடந்த 18ஆம் திகதி மின்னேரிய – ரொட்டவௌ பகுதியில் எரிபொருள் போக்குவரத்து ரயிலில் காட்டு யானைகள் மோதிய சம்பவத்தை அடுத்து ரயில்வே திணைக்களம் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.