சர்வசன அதிகாரம் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர வியாழக்கிழமை (10) வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தாயக மக்கள் கட்சியின் உப தலைவருமான சன்ன ஜயசுமன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக ஆகியோரும் சர்வசன அதிகாரம் கூட்டணி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட வேட்பு மனுவில் கையெழுத்திட்டனர்.