இன்று (23) முதல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலின் செயற்பாடுகள் காரணமாக தபால் ஊழியர்களின் விடுமுறையை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.