எதிரணியினர் அரசியல் செய்யும் உரிமையை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இதனை நாம் ஏற்றுக் கொண்டவர்களாப நமது அரசியலில் நாம் ஈடுபட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தலவத்துகொடயில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியைப் பெற்றோம். இலங்கையின் கருத்தியல் மற்றும் கலாசார மட்டத்தில் கடுமையான போட்டி நிலவிய ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
பழைய தோல்வியடைந்த பொருளாதார மற்றும் அரசியல் பயணத்தின் தொடர்ச்சிக்காக நின்ற முகாமுக்கும் எதிராக நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்திய முகாமுக்கும் இடையே ஒரு புதிய பொருளாதார, அரசியல், கலாசார பயணம் மற்றும் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது.
இம்முறை மக்கள் வலுவான முடிவை எடுத்து தேசிய மக்கள் சக்தியான எங்களை வெற்றி பெறச் செய்தனர்.
அந்த முடிவை எடுப்பதற்கு உறுதியும் நம்பிக்கையும் கொண்டிருந்த மக்களுக்கு எங்களது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
Monday, October 14, 2024
எதிரணியினர் அரசியல் செய்யும் உரிமையை நான் ஏற்றுக் கொள்கிறேன் - ஜனாதிபதி அநுர!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »