டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.
86 வயதான ரத்தன் டாடா மிகவும் வெற்றிகரமான வணிகர்களில் ஒருவராக வலம் வந்தார். பிரபல தொழிலதிபரான இவர் டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் கடமையாற்றினார்.
அவரது சேவைப் பணி மற்றும் தொலைநோக்கு பார்வைக்காக அனைவராலும் பரவலாக அறியப்பட்டவர்.
இந்தநிலையில், மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் சூட்டப்படுவதாக அந்த மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
இதன்படி குறித்த பல்கலைக்கழகம் ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Tuesday, October 15, 2024
ரத்தன் டாடாவின் பெயரில் பல்கலைக்கழகம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »