எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு நடத்து அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாத விசேட தேவையுடைய வாக்காளர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும்.
இந்த போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும், கிராம அலுவலர் அலுவலகங்களிலும் , www.election .gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் உரிய தெரிவத்தாட்சி அலுவரிடம் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பவர், தன்னால் கால்நடையாகவோ அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையத்திற்குச் செல் முடியாது என நிரூபிக்கக்கூடியவாறு வைத்தியரின் சான்றிதழுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்கழு மேலும் தெரிவித்துள்ளது.
Friday, October 18, 2024
பொதுத் தேர்தல் - விசேட தேவையுடையோருக்கு போக்குவரத்து வசதிகள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »