Our Feeds


Friday, October 11, 2024

Sri Lanka

தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய இன்னும் சில பிரபலங்கள்...!



இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.


இவர்களில் கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களும் அடங்குவர்.


கடந்த அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கடமையாற்றிய பிரசன்ன ரணதுங்க, இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.


அத்துடன் கடந்த அரசாங்கத்தில் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய கனக ஹேரத் இந்த வருட பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவும் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.


அக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்னவும் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளார்.


அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்கவும் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இன்று தெரிவித்தார்.


ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசமும் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »