விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை 6.30 மணியளவில் அவர் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு அவரை மருத்துவர் பரிசோதித்தார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சிறைச்சாலையின் எச் வார்டில் தடுத்து வைக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் BMW ரக கார் நிறுத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.