தீபாவளி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (1) கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு குறித்த விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த தினத்திற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.