Our Feeds


Sunday, October 27, 2024

Zameera

இந்த அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்


 இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை.மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை அனுரகுமார திசநாயக்கவிற்கும்  பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அப்படியென்றால் எங்கள் இருவருக்கும் இடையில்   என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்,நான் பெரும்பான்மை இ;ல்லாத முன்னாள் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி

நான் சமையல்எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கோருவதற்காக உங்கள் முன்னால் வந்துள்ளேன்.

நாடு வீழ்ச்சியடைந்த போதுபொறுப்பேற்க எவரும் இருக்கவில்லை. சஜித்தும் இல்லை அனுரவும் இல்லை.

பிரதமராவதற்கு எவரும் இருக்கவில்லை.

ஒருநாள் நிமால்லான்ச பிரதமராக தயாரா என டி என்னிடம் கேட்டார் நான் எப்படி என வினவினேன்.

அதற்கு அவர் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார்,அதன் பின்னர் நான் ஜனாதிபதியை சந்திக்கசென்று சவாலை ஏற்றுக்கொண்டேன்.

அந்த சமயம ஜனாதிபதி பதவியை துறந்தவேளை நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்ட வேளை எவரும் இருக்கவில்லை,தற்போது தலைமைத்துவத்தை கோரும் அனைவரும் தப்பியோடினார்கள்.

நாங்கள் இராணுவத்தை பயன்படுத்தி இந்த நாட்டை காப்பாற்றினோம்.

மக்கள் அனுரகுமாரதிசநாயக்க மூன்று மாதங்களிற்கே பதவி வகிப்பார் என தெரிவிக்கின்றனர்.நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை.அவர் தனது பதவியை தொடரவேண்டும்.அவரது கட்சியிலிருந்து அரசியல் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படுமா தெரியாது. அவ்வாறான விடயங்களை செய்யக்கூடாது.

ஆனால் அவர்களின் பட்டியலை பார்த்தால் இந்த அரசாங்கம்  மூன்று மாதங்கள் கூட  நீடிக்கும் என நான் நினைக்கவில்லை.மூன்று வாரங்கள் கூட நீடிக்காது.

ஆகவே நாட்டிற்கு தலைமை தாங்ககூடியவர்களிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.ஆகவே நாட்டிற்கு தலைமை தாங்ககூடியவர்களிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதியால் மூன்று வருடங்கள் ஆட்சி செய்ய முடியும்.

அவ்வாறான சூழ்நிலை காணப்படாவிட்டால் நாட்டில் வரிசைகள் யுகம் உருவாகும்.தற்போதைய தேங்காய் வரிசைகளிற்கு பதில் புதிய வரிசைகள் உருவாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »