போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம்
தடுப்பு நடவடிக்கை தொடர்பில் பிரதமரிடம் மகஜர் ஒன்றை கையளிப்பதற்காக காத்தான்குடியிலிருந்து மாணவியொருவர் கொழும்புக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று (14) காலை பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் ஹரிணியிடம் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.
14 வயதுடைய பாத்திமா நதா என்ற மாணவியே இவ்வாறு காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி சைக்கிளில் பயணித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும் பிரதமரிடம் கோரிக்கையை குறித்த மாணவி முன்வைத்துள்ளார்.