சுற்றுலா நகரமான அறுகம்பேவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரை 90 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் இன்று (29) இதனை அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இருவர் தடுத்து வைக்கப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் மனு தாக்கல் செய்தனர்.
சந்தேக நபர்கள் நால்வரிடமிருந்தும் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களின்படி இச்சம்பவத்தில் மேலும் சிலர் தொடர்புபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களைக் கைது செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.