பெப்ரவரி 4, 2025 அன்று 77 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான தேவையான வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வைக்கு ஒரு சிறப்பு வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு நியமனம் தொடர்பில் அமைச்சரவையில் பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடக்கப்படவுள்ளனர்.