எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியல் அத்தாட்சிப்படுத்தல் நடவடிக்கை நேற்று முன்தினம் இடம்பெற்றது.
அத்துடன், தபால் மூல வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 23 ஆம் திகதி அஞ்சலிடல் பணிகளுக்காகக் கையளிக்கப்படவுள்ளன.