மனித பாவனைக்கு உதவாத 53 கொள்கலன் அரிசித் தொகை ஆறு வருடங்களாக சுங்கப் பிரிவில் விடுவிக்கப்படாமல் இருப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையில் தெரியவந்துள்ளது.
குறித்த அரிசித் தொகையின் பெறுமதி 18 கோடியே 60 இலட்சத்து 58 ஆயிரத்து தொள்ளாயிரத்து 22 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் காரணமாக இந்த அரிசியை கால்நடை தீவனமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயத்தில் சுங்கச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கவே செயற்படுமாறு கணக்காய்வு அறிக்கைகளில் பரிந்துரைத்துள்ளது.
2019ஆம் ஆண்டு அந்த கொள்கலன்களுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடங்கிய ஏனைய கொள்கலன்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு இருந்தமையால் குறித்த 53 கொள்கலனில் அடங்கிய அரிசித் தொகை விடுவிக்கப்படாமல் இருந்ததாக சுங்கத் திணைக்களத்தின் கணக்காளர் தெரிவித்ததாக கணக்காய்வு அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.