எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது.
ஆணைக்குழுவுக்கு நேற்றைய தினத்துக்குள் 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது.
அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும், தேர்தல் தொடர்பான வன்முறைகள் தொடர்பான புகார்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற 401 முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.