கடந்த அரசாங்கத்தில், அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே வீடுகளை கையளித்துள்ளதாக, பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருட்கள், உடைமைகளை எடுத்துக்கொள்வது போன்ற பல சம்பிரதாயங்களை முடிக்க வேண்டியிருப்பதால், வீடுகளை கையளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.