ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில்( Presidential Security Division) இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 307 பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் 258(1) மற்றும் (II) இன் படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒப்புதலின் கீழ் இந்த இடமாற்றங்கள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் 11 தலைமை ஆய்வாளர்கள், 5 ஆய்வாளர்கள், 38 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 12 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் தற்காலிகமாக கடமையாற்றிய 24 பொலிஸாரின் இடமாற்ற உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது.