பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 2,000 ரூபாயாக நிர்ணயிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த கால வேதன பேச்சுவார்த்தைகளின் போது, தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கங்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 2,000 ரூபாயை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தற்போது ஜனாதிபதியாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பதவி ஏற்றுள்ள நிலையில், அந்த கோரிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்று வேலுகுமார் தெரிவித்தார்.
Wednesday, October 2, 2024
பெருந்தோட்டத் தொழிலாளர் வேதனத்தை 2000/- ஆக உயர்த்துங்கள் - வேலுகுமார்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »