இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த 95 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷ்ய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறைவேற்றுவற்காக, 65 உக்ரைன் போா்க் கைதிகளை ஏற்றிக் கொண்டு ரஷ்ய இராணுவ எல்லை நகரான பெல்கராடை நோக்கி வந்துகொண்டிருந்தபோது அதனை உக்ரைன் சுட்டுவீழ்த்தியது.
இதில், போா்க் கைதிகளும், விமானிகள் உள்பட 9 ரஷ்யா்களும் உயிரிழந்ததாக ரஷ்யா குற்றஞ்சாட்டியது.
இந்த விவகாரத்தால் கைதிகள் பரிமாற்ற பேச்சுவாா்த்தைகள் நிறுத்தப்படலாம் என்று அஞ்சப்பட்டது.
இருந்தாலும், அதன் பிறகு இரு நாடுகளும் அடிக்கடி போா்க் கைதிகளை பரிமாறிவருகின்றன.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 பெப்ரவரி மாதம் படையெடுத்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த 4 மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. அந்த மாகாணங்களில் எஞ்சிய பகுதிகளை கைப்பற்ற ரஷ்யாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் போரிட்டு வருகின்றன.
இதில் இரு தரப்பிலும் ஏராளமான வீரா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.