Our Feeds


Wednesday, October 23, 2024

Zameera

10,323 சிறுவர்கள் போஷாக்குக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்


 இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட 10,323 சிறுவர்கள் கடுமையான போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை காட்டுகிறது.

அறிக்கையின்படி, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளிலும், ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளிலும், இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது.

எனினும், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15,763 ஆக இருந்தது.

ஐந்து வயதுக்குட்பட்ட 13,1649 சிறார்களை பதிவு செய்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

இந்த மதிப்பீட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எடையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »