10 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களுடன்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (09) அதிகாலை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து சட்டவிரோதமாக 10 மில்லியன் பெறுமதியான பொருட்களை கடந்த முயன்ற 44 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பைச் சேர்ந்த வர்த்தகரான சந்தேக நபர், விமானத்தின் ஊடாக பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தேக நபரின் 4 பயணப்பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 152 கையடக்கத் தொலைப்பேசிகள், 5 மடிக்கணினிகள், விலையுயர்ந்த 38 மதுபான போத்தல்கள், 44 இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் ஏராளமான சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.