பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் உத்தியோகபூர்வ
FaceBook பக்கத்தில் ShortNews செய்தித் தளத்தின் பெயரில் எமது லோகோவை பயன்படுத்தி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் கூறியது போன்ற ஒரு பொய்யான செய்தி பதிவிடப்பட்டுள்ளது.https://www.facebook.com/share/p/fjSQuj3gU9tVwVcD/?mibextid=WC7FNe
அப்படியொரு செய்தியை எந்த சந்தர்பத்திலும் நாம் வெளியிடவில்லை. அத்துடன் உலமா சபை தலைவைரும் அப்படியான ஒரு தகவலை எங்கும் சொன்னதாக செய்திகள் வெளிவரவில்லை.
அத்துடன் பொய்யை பரப்பிய பாராளுமன்ற உறுப்பினருக்கு இன்று என்ன திகதி என்பது கூட தெரியவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
எமது செய்திப் பிரிவின் பெயரில் பரப்பப்பட்டுள்ள கீழுள்ள பொய்யான செய்தியில் திகதியை கூர்ந்து கவனித்துப் பாருங்கள். அதில் 20.09.2024 என்று போடப்பட்டுள்ளது. இன்று 19ம் திகதி என்பதை பாராளுமன்ற உறுப்பினரின் பொய் பரப்பும் பிரிவுக்கு இச்செய்தியினூடாக குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகிறோம்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு தான் சார்ந்த கட்சி வெல்ல வேண்டும் என்பதற்காக பச்சை பொய்யை எமது தளத்தின் பெயரை பயன்படுத்தி வெளியிட்டுள்ள இஷாக் ரஹ்மான் MP க்கு எதிராக ShortNews சார்பில் தேர்தல்கள் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றில் சட்ட ரீதியாக முறைப்பாடு செய்யவுள்ளோம் என்பதுடன், அரசியல் லாபத்திற்காக சமூகத் தலைவர்களின் பெயரில் பச்சையாக பொய்களை பரப்பும் இதுபோன்றவர்களை சமூகம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிர்வாக ஆசிரியர்,
ShortNews செய்திக் குழுமம்.