நல்லாட்சிக்கான தேசிய முன்னனி - NFGG ஐக்கிய
மக்கள் சக்தி - SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு!SJB யின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னனி அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (03.09.2024) கட்சியில் தவிசாளர் Dr KM zahir தலைமையில் ஒன்று கூடிய கட்சியின் தலைமைத்துவ சபை கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய மூன்று வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை முழுவதுமாக ஆராய்ந்த பின் அதன் அடிப்படையிலும் அவர்களது கட்டிய கடந்த கால அரசியல் செயற்பாடுகளை கருத்தில் கொண்டும் குறித்த முடிவுக்கு வந்துள்ளதாக கட்சியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளையும், மக்கள் எதிர்கொண்டுள்ள அவசர தேவைகளையும் கருத்தில் கொண்டு அதற்கு நடைமுறை சாத்தியமான தீர்வுகளைக் கொண்டுள்ள அதற்கான ஆற்றல்களையும் வளங்களையும் கொண்டுள்ள அணியாக அடையாளம் கண்டதன் அடிப்படையில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முடிவுக்கான விரிவான காரணங்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் மக்களுக்கு தெளிவூட்டப்படும் எனவும் NFGG தெரிவித்துள்ளது.