ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகும் வரையிலான காலப்பகுதி மற்றும் அதன் பின்னரான காலப்பகுதி உள்ளடங்களாக ஒரு வார காலத்துக்கு வாகனங்களினூடாகவோ அல்லது நடைப் பயணமாகவோ பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எனவே, சட்ட ஒழுங்கை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமுலில் உள்ள சட்டங்களை மீறும் பட்சத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட ஒழுங்கை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.