ஊடக அமைச்சராக இன்று கடமைகளைப் பொறுப்பேற்ற விஜித ஹேரத் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் ஒலிபரப்பு கூட்டுத்தாபனங்களின் புதிய தலைவர்களை நியமித்தார்.
இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) புதிய தலைவராக செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமனம் பெற்றுள்ளார்.
இதேவேளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) புதிய தலைவராக உதித கயாஷன் நியமனம் பெற்றுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் புதிய தலைவராக பிரியந்த குமார வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரியந்த குமார வெதமுல்ல கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றுள்ளார்.