சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகள் இலங்கைக்கு பாதகமானவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற வர்த்தக சமூகத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர் சர்வதேசநாணயநிதியதுடனான உடன்படிக்கையை தனது அரசாங்கம் பின்பற்றும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சர்வதேசசமூகத்துடனான அனைத்து உறவுகளும் சர்வதேச நாணயநிதியத்தின் கூடைக்குள் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அவர் இதன் அர்த்தம் என்னவென்றால் நாட்டின் முழு எதிர்கால திட்டமும் சர்வதேச நாணயநிதியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதே என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நேரத்தில் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையிலிருந்து யாராவது ஒருதலைப்பட்சமாக விலகநினைத்தால் அது நாட்டின் மக்களிற்கும் நாட்டிற்குமான கடப்பாட்டை கைவிடுதலாகும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சர்வதேச நாணயநிதியத்திலிருந்து விலகுவோம் என்ற எதிர்பார்ப்பு எங்களிற்கு இல்லை என நாங்கள் உங்களிற்கு உறுதியளிக்க விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.