Our Feeds


Sunday, September 15, 2024

Sri Lanka

தமிழரசுக் கட்சி சஜித்துக்கு ஏன் ஆதரவு - விசேட அறிக்கை நாளை!


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட அறிக்கையொன்றை இலங்கை தமிழரசுக் கட்சி நாளை வெளியிடவுள்ளது.

வவுனியாவில் குறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் குழு கடந்த வாரம் கூடியிருந்தது.

இதன்போது, சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து ஆராயப்பட்டிருந்து.

அதன்படி சஜித் பிரேமதாசவை, இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரிப்பதற்கான காரணங்கள் அடங்கிய விசேட அறிக்கையொன்று நாளை வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »