Our Feeds


Tuesday, September 10, 2024

Zameera

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் பாதிப்பு


 சுமார் 16000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் குடும்பங்களில் 1/4 பகுதியினர் அயலவர்களின் உணவின் மூலம் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

உயரம் குறைதல், பலவீனமாதல், நிறை குறைவாக இருத்தல், நுண் போசனைக் குறைபாடுகள் (விற்றமின்கள் கனியுப்புக்கள் போதியளவு இல்லாமை) போன்ற நான்கு விடயங்களின் ஊடாக சிறுவர் போசாக்குக் குறைபாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தடையின்றி ஊட்டச்சத்து வழங்குதல், ஆரோக்கியமான மற்றும் குறைந்த விலை உணவுக்கான பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல், முன்பள்ளி உணவு மற்றும் பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தரமான உணவு வழிங்கலிற்கான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை வழிகாட்டல்கள் ஆகியவற்றின் அமுல்படுத்தலைக் கண்காணித்தல் உள்ளிட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால பரிந்துரைகள் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »