பாகிஸ்தானில் இன்று மதியம் 12:58 மணியளவில்
5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புதுடில்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
வட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.