சஜித் பிரேமதாசவால் ஒருபோதும் அநுர திஸாநாயக்கவை
தோற்கடிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஹியங்கனையில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் எழுந்து நின்று வதந்திகள் பேசி இரண்டு மூன்று மணித்தியாலங்களை வீணடித்த சஜித்துக்கு கடைசியாக நடந்தது அநுர திஸாநாயக்கவுக்கு அச்சுறுத்தல் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நாட்டின் வரலாற்றில் இருந்து போட்டி என்பது இரண்டு நபர்களுக்கிடையில் இருந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் தான் போட்டி நிலவுவதாகவும் தெரிவித்தார்.
ஆளும் கட்சியை பிரதமர் கவனித்துக்கொள்கிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சியை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
அநுர திஸாநாயக்க தற்போது சஜித் பிரேமதாசவை மிஞ்சிவிட்டார் என தெரிவித்த ஜனாதிபதி, சஜித் தற்போது அனுரவை தோற்கடிக்க முடியாத நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது சஜித் செய்யும் முட்டாள்தனமான வேலையினால் அனுரவுக்கு உதவி கிடைக்கும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அனைவருக்கும் ஞாபகம் வைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.