Our Feeds


Wednesday, September 18, 2024

Sri Lanka

ஜனாதிபதித் தேர்தல் - இறுதி தேர்தல் பேரணிகள் இன்று!


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் இறுதிக் கூட்டங்கள் இன்று கொழும்பு மற்றும் வெளிமாவட்டங்களில் நடைபெறவுள்ளன.

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் "ரணிலால் முடியும்" பிரச்சாரக் கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன.

அதன்படி, இன்று பிற்பகல் 1 மணிக்கு மாத்தறை, உயன்வத்தை மைதானத்திலும், பிற்பகல் 2 மணிக்கு காலி சமனல விளையாட்டரங்கிலும், பிற்பகல் 3 மணிக்கு களுத்துறை பொது விளையாட்டரங்கிலும் இந்தப் பேரணிகள் நடைபெறவுள்ளன. மேலும் மாலை 4 மணிக்கு ஹோமாகம நகரிலும், இறுதிப் பேரணி மாலை 5.30 மணிக்கு கொழும்பு கொஸ்கஸ் சந்தியிலும் நடைபெறவுள்ளது.

SJB ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் இறுதிப் பேரணி இன்று (18) பஞ்சிகாவத்தை டவர் மண்டபத் திரையரங்கிற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் இறுதிப் பேரணி இன்று (18) நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் இறுதிப் பேரணி பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டரங்கில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »