கண்டிக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றிய ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக தேர்தல் கடமைகளில் ஈடுபட்டு சேவையாற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
இரு குழுவினராக கண்டிக்கு விஜயம் செய்து கண்டி மாவட்டத்தில் பல இடங்களையும் பார்வையிட்டதன் பின் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேயை அளுநர் அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தினை தெரிவித்துள்ளனர்.
இக்குழுவில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சென்செஸ் ஆமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கெரமன் மெரினோ ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர்.
பேராதனை நிருபர்