அரசியல்வாதிகளின் தவறுகளினால் தான் இளைஞர்கள் மாற்றத்தை கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ‘திலித் கிராமத்திற்கு’ தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"இப்போது உங்கள் வீடுகள் தேர்தல் அறிக்கைகளால் நிரம்பியுள்ளன.
ஓவ்வொரு 05 வருடங்களுக்கும் இவை வழங்கப்படுகின்றன.
ஆனால் நாம் முன்னோக்கி செல்லவே இல்லை.
போக வழியே இல்லையா? என்று தான் இலங்கை இளைஞர்கள் வீதியில் இறங்கினர்.
மாற்றங்களை கோரினர், அதில் வெளிநாட்டு தாக்கங்கள் இல்லை என்று கூற முடியாது.
ஆனால் இந்த நாட்டில் உள்ள சுயநல அரசியல்வாதிகளால் இவர்கள் கிளர்ந்தெழுந்தனர்.
அதைத்தான் சொல்கிறேன்... மாற்றம் வேண்டும் என்றால் வேறு மாற்று நபர் இருக்க வேண்டும். நீங்கள் வித்தியாசத்தை உணர வேண்டும்." என்றார்.