அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் பிரதிப்
பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை அடுத்த மாதம் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப பிரதம நீதியரசர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட அமர்வு இன்று (27) உத்தரவிட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றங்கள் உத்தரவிட்ட 750 இலட்சம் ரூபா இழப்பீடுகளில் 100 இலட்சம் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்படி, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாததற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன எதிர்கொண்டுள்ளார்.