ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் சஜித் பிரேமதாசவுக்கு இந்த தேர்தலில் வெற்றியீட்டியிருக்க முடியும் என்ற கருத்துக்கு சஜித் பிரேமதாச இன்று (24) பதிலளித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து வௌியிடுகையில், "இலக்கத்தை மட்டும் பார்த்தால் இப்படி ஒரு விடயத்தை சொல்லலாம். ஆனால் ஆழமான அரசியல் அலசலுக்கு சென்றால் அது உண்மையல்ல என்பது புரியும்."
"நாங்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியாக முன்னோக்கி செல்வோம். அதனுடன் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நபருடன் கைகோர்க்கலாம்"
"இன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும், அனைத்து எம்.பி.க்களும் ஒருமனதாக என்னை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளனர். எனது தலைமையில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லவும் பரிந்துரைத்தனர்" என்றார்.